Breaking News

இனி மழை பெய்தால் லீவ் கிடையாது

அட்மின் மீடியா
0
தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அறிவித்துள்ள அறிவிப்பில்


பள்ளிகளுக்கு மழை பெய்த உடனேயே விடுமுறை விடக்கூடாது மழையால் வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே விடுமுறை அளிக்க வேண்டும்.



மழையால் பாதிக்கப்படும் பகுதிக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும்.

மழையால் போக்குவரத்து பாதிக்கபடும் நிலை ஏற்பட்டால் மட்டுமே விடுமுறை அளிக்க வேண்டும்.

சிறு தூறல் விழுந்தால் உடனே விடுமுறை அறிவிக்கக் கூடாது.

மழை காரணமாக கல்வி மாவட்ட அளவில் அல்லது ஊராட்சி அளவில் மட்டுமே விடுமுறை விடலாம்.

மேலும் மழையை பொறுத்து பள்ளி துவங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு விடுமுறை அறிவிக்கலாம்.

விடுமுறை காரணமாக பாடத்திட்டம் ஏதும் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பள்ளி கல்வித்துறை செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது


மேலும் அட்மின்மீடியா செய்திகளை உங்கள் வாட்ஸப் குருப்பில் நீங்கள் பெற கீழ் கண்ட லின்ங் மூலம் வாட்ஸப் குருப்பில் இனைந்து கொள்ளுங்கள்

 

Give Us Your Feedback