Breaking News

இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு குஞ்சலி மரைகாயர்

அட்மின் மீடியா
1
இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு மறைக்கப்பட்ட வரலாறு

குஞ்சலி மரைகாயர்




கேரளா கோழிக்கோட்டிற்க்கு சொந்தகாரர் நம்மில் பலருக்கும் இந்த பெயர் தெரியாது சரித்திரத்தில் இது தான் முதல் சுதந்திர போர் 

ஆம் நம் நாட்டில் ஆங்கிலேயர்கள் வருவதற்க்கு முன்பு வந்த போர்ச்சுகீசியர்களை ஓட ஓட விரட்டியவர் குஞ்சலி மரைக்காயர்

இந்தியாவிற்க்கு வாணிகம் செய்யவந்த  வாஸ்கோடகாமா கி.பி 1498 மே, 17ல் கோழிக்கோடு என்ற இடத்தில் வந்திறங்கினார். வியாபாரத்தின் பெயரைக் கூறி இந்திய மண்ணில் கால்பதித்த மிகக் குறிய காலத்திலேயே கி.பி 1510ல் போர்ச்சுகீசியர்கள் கோவாநகரைக் கைப்பற்றுகிறார்கள்.அவர்களின் அடுத்த இலக்கு கேரளா

அதற்காக அன்றைய கோழிகோடு அரசன் சாமுத்ரிக்கும் போர்ச்சுகீசியருக்கும் இடைவிடாத போர் அடிக்கடி நடை பெற்று வந்தது. மலபார் பிராந்திய போர்ச்சுகீசிய படைத்தலைவர் மார்டின் டி-ஸோஸா, 25 போர்கப்பல்களுடன் வடக்கிலிருந்த கோலத்ரி மன்னனின் ஆதரவோடு கோழிக்கோடு கடற்கரையை வந்தடைந்தார். அந்த திடிர் போரை கோழிக்கோடு அரசன் சாமுத்ரி செய்வதறியாது திகைத்து போனார்

அந்நியரைக் காலூன்ற அனுமதிக்க முடியாது அதற்காக தரையிலும் கடலிலும் மனித இரத்தம் பெருக்கெடுத்து ஓடினாலும் நாம் அதற்குத் தயார்என்று அந்நியருக்கெதிராக முதன்முதலில் சூளுரைத்தார் குஞ்சாலி மரைக்காயர்

 சொன்னது மட்டுமின்றி செயலிலும் காட்டும் விதமாக அந்நியருக்கெதிரான போரில் கடற்படைக்குத் தலைமை தாங்கினார்  அக்காலகட்டத்தில் கடற்படையைக் குறித்து எவ்வித அறிவோ திட்டங்களோ இந்திய அரசர்களுக்கு இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போரில் வெற்றி பெற்று சிம்ம சொப்பனமாக இருந்தார்

கி.பி. 1521ல் ஹென்றி டிமெனபெஸ் – லோப்வாஸ்-டி-சம்பாயோ ஆகியோர் அடங்கிய போர்ச்சுகீசிய கடற்படை, கோழிக்கோட்டு அரசன் சாமுத்ரியின் கடற்படைத்தளமான பொன்னானி மீது ஆக்ரமிப்பைத் தொடுத்தது. இதையடுத்து அஹ்மது மரைக்காயர், குஞசாலி மரைக்காயர் இவர்களது மாமா முஹம்மது அலி மரைக்காயர் ஆகியோர் கொச்சியிலிருந்து வந்து போர் புரிந்து வெற்றி பெற்றார்கள் கி.பி. 1523ல் குஞ்சாலி மரைக்காயர் பரங்கியருக்கெதிராகப் போர் செய்ய 200 பெரிய கப்பல்களைத் தயாராக வைத்திருந்தார்.

 போர்ச்சுகீசியருக்கும், குஞ்சாலி மரைக்காயர் படைக்கும் உக்கிரமானபோர் நடைபெற்றது. இப்போரில் குட்டி அலி போர்சுகீசியரை கலங்கடித்து அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். அதன்பின்பு 1528ல் பர்கூரில் குட்டி அலியின் படைகளும் போர்த்துக்கீசியப் படைகளும் கடுமையாக மோதிக் கொண்டன. மங்கலாபுரத்துக்கும் மவுண்ட் அலிக்கும் இடையில் நடைபெற்ற போரில் சின்னகுட்டி அலி போர்த்துக்கீசியரால் சிறைப்பிடிக்கப்பட்டார்.

வெகுண்டெழுந்த குஞ்சலி மரைக்காயர் கி.பி. 1528ல் செத்வாய் என்னுமிடத்தில் போர்த்துக்கீசியர் பல கப்பல்கள் நிறைய இந்திய வளங்களை ஏற்றிக் கொண்டு பலத்த பாதுகாப்புடன் தங்கள் தாய் நாட்டிற்குக் கொண்டு செல்ல முயன்றபோது குஞ்சாலி மரைக்காயர் அக்கப்பல்களைத் தாக்கி, ஒரு வெள்ளையரையும் விடாமல் கொன்று குவித்து மாபெரும் வெற்றியைப் பெற்றார். 

கி.பி. 1531ல் போர்ச்சுகீசியரை கடற்போரில் கதிகலங்கச்செய்த அஹ்மது மரைக்காயர் வீரமரணத்தினைத் தழுவிக் கொண்டார். கி.பி. 1538ல் தூத்துக்குடி கடற்கரையில் போர்த்துக்கீசியருக்கும், குஞ்சாலி மரைக்காயருக்கும் உக்கிரமான போர்கள் நடைபெற்றன. போர்த்துக்கீசிய படையை இங்கு குஞ்சாலி மரைக்காயர் தோற்கடித்தார். இது போல் பல போர்களில் அந்நியருக்கெதிராக கற்பனைகளை மிஞ்சிய பெரும் சாதனை புரிந்த மாவீரன் குஞ்சாலி மரைக்காயர்

கொழும்பில் நடைபெற்ற போரில் எதிரிகளின் குண்டுக்கு இரையாகி நாட்டுக்காக தன்னுயிர் கொடுத்து வீரமரணம் எய்தினார்.

*தியாகங்கள் தொடரும்*

Tags: இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு

Give Us Your Feedback

1 Comments

  1. வரலாறு தந்தமைக்கு நன்றி அட்மின்

    ReplyDelete