Breaking News

இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு மௌலானா முகம்மது அலி

அட்மின் மீடியா
0
இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு 

​மறைக்கப்பட்ட வரலாறு​ 

மௌலானா முகம்மது அலி



​நம்மில் பலருக்கும் இந்த பெயர் தெரியாது​ சரித்திரத்தில்  மறைக்கப்பட்டது

1920 - இல் ஈரோட்டில் நடைபெற்ற மஜ்லிசுல் உலமாவின் மூன்றாவது மாநாட்டிற்கு வருகை தந்த மௌலானா முகம்மது அலி  க்கு வரவேற்பு அளித்த ஈ.வே.ரா பெரியார் அவ்வரவேற்புரையின் போது 

காந்திஜிக்குள் இந்த தேசம் இருக்கிறது. ஆனால்
அந்த காந்தியோ மௌலானா முகம்மது அலியின் பாக்கெட்டில் இருக்கிறார்!
என்றார். 

அந்த அளவிற்கு தனது தேசிய நடவடிக்கைகளால் மிகப்பெரும் தாக்கத்தை இந்த மண்ணில் ஏற்படுத்தியவர் மௌலானா முகம்மது அலி. 

1930 - இல் லண்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க காந்திஜியுடன் செல்கிறார். 

அப்போது அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். மாநாட்டில் பேச அவருக்கு ஐந்து நிமிடங்களே அனுமதிக்கப்பட்டிருந்தது. தேச நலனுக்காக தேக நலனையும் பொருட் படுத்தாமல் பேசுகிறார். அவகாசத்தை மறந்து இரண்டு மணி நேரம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆங்கிலேய அரங்கில் பேசிய அவரது உரையை யாரும் மறக்க முடியாது

மௌலானா ஆற்றிய அவ்வுரையின் இறுதி வார்த்தைகள் :என் தேசத்திற்கு நான் திரும்ப விரும்புகிறேன்.அவ்வாறு என் தேசத்திற்கு நான் திரும்புவது எங்கள் தேசத்தின் சுதந்திரத்திற்கான உத்தரவை நீங்கள் என் கையில் கொடுத்தால் மட்டுமே சாத்தியமாகும். 


ஏனென்றால் ஒரு அடிமை நாட்டிற்கு இனி திரும்புவதை நான் விரும்பவில்லை.நான் இந்த அந்நிய மண்ணில் மரணிப்பதை விரும்புகிறேன். ஏனென்றால் இது சுதந்திர மண். எனவே எங்கள் தேசத்திற்கு சுதந்திரம் கொடுங்கள்! இல்லையேல் உங்கள் மண்ணில் நான் அடக்கமாக ஒரு கல்லறை கொடுங்கள் !
*  ‘’I Want to go back to my country’’. He said in a loud voice. ‘’If I can go back with the substance of Freedom in my hand. Otherwise Iwill not go back to a slave country. Iwill even prefer to die in a foreign country so long as it is a Free Country,and if you do not give us Freedom in India, You will have to give me a grave here.’’
- Shan Muhammad, Freedom Movement in India- The Role of Ali Brothres, P.231.


அதற்க்கு அடுத்த லண்டன் வட்டமேசை மாநாட்டில் மௌலானா முஹம்மது அலி பேசிய படி அங்கேயே 04-01-1931- இல் காலமானார். 

அவர் எண்ணம் போல் ஒரு சுதந்திர மண்ணில் மரணம் நிகழ்ந்தாலும் அவரது ஜனாஸாவை  லண்டனில் அடக்கம் செய்ய முஸ்லிம் நாடுகள் சம்மதிக்கவில்லை. 

எங்கள் மண்ணில் நல்லடக்கம் செய்கிறோம் என்று 22 நாடுகள் அவரது ஜனாஸாவை வேண்டி நின்றன. 

இறுதியாக பைத்துல் முகத்தஸின்(ஜெருசலம்) பொறுப்பாளர் அமீருல் ஹுஸைனிகிலாபத் கமிட்டியை வேண்டிக் கொண்டதற்கிணங்க மௌலானாவின் ஜனாஸா பைத்துல் முகத்தஸில் அல்-அக்ஸா பள்ளிவாசல் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

மவுலானா முகம்மது அலி அவர்கள் புனித ஹஜ் பயணம் சென்றபோது புன்த கஃபா ஆலயத்தின் திரைசீரையைப் பிடித்து கண்ணர் மல்கியவாறு
கேட்ட பிரார்த்தனை : 

இறைவா...
என் இந்திய தேசத்திற்கு சுதந்திரத்தைத் தா !

சுதந்திரம் பெற்ற இந்தியாவில்
இஸ்லாத்திற்கு வாழ்வைத் தா !

அந்நியருக்கெதிராக  நாட்டைப் பாதுகாக்க, முஸ்லிம்கள் செய்த தன்னிகரில்லா தியாகங்களின் சில துளிகள் தான் இவை.

முஸ்லிம்கள் அந்நியர்கள் அல்ல இந்த நாட்டுக்காக, இந்திய விடுதலைக்காக இரத்தம் சிந்தியவர்கள் என்பதை நாம் அனைவருக்கும் சொல்லியாகவேண்டும்.

*​தியாகங்கள் தொடரும்​*

Tags: இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு

Give Us Your Feedback