Breaking News

இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு ஜவேரி சகோதர்கள்

அட்மின் மீடியா
0
இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு
மறைக்கப்பட்ட வரலாறு

ஜவேரி சகோதர்கள் அப்துல்லா அண்ட் கம்பெனி




நம்மில் பலருக்கும் இந்த பெயர் தெரியாது சரித்திரத்தில்  மறைக்கப்பட்டது
மகாத்மா காந்தியை தெரியும் ஆனால் மகாத்மா காந்தி அவர்களை சுதந்திர போராட்டதிற்கு அழைத்து சென்றது யார் என்று தெரியுமா ?

குஜராத் மாநிலம் போர்பந்தரைச் சேர்ந்த வியாபார சகோதரர்கள் அப்துல்லா ஆதம் ஜவேரி மற்றும் அப்துல் கரீம் ஆதம் ஜவேரி சகோதர்கள் ஆவார்

போர்பந்தர்! இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தி பிறந்த ஊர்
குஜராத் மாநிலத்தில் உள்ள இந்தத் துறைமுக நகரம்தான், ஜவேரி குடும்பத்தாரின் பிறப்பிடம்.

அப்ல்கரீம் ஹாஜி ஆதம் ஜவேரி. அவரது அண்ணன் அப்ல்லா ஹாஜி. இவர்கள் இருவரும் ‘அப்துல்லா அண்ட் கம்பெனி’என்ற பெயரில் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் கப்பல் கம்பெனி நடத்தினர். 

அவர்களிடமிருந்த மொத்த கப்பல்கள் ஐம்பத்து நான்கு. அதில் நான்கு பயணிகள் கப்பல். 1893_ம் ஆண்டு அப்ல்கரீம், அவரது அம்மாவைப் பார்ப்பதற்காக போர் பந்தர் வந்திருந்தார்.

அங்கு  காந்தியைச் சந்தித்தார் காந்தி அப்போது சட்டப்படிப்பு முடித்த 24 வயது இளைஞர் அவர் பண்பு அப்துல் கரீம் அவர்களை கவர்ந்ததால், டர்பனில் உள்ள அவரது கப்பல் கம்பெனியின் சட்டக்குழுவில் காந்தியைச் சேர்த்துக் கொள்ள விரும்பினார். 

காந்திக்கு சம்பளம் அப்போது நூற்று ஐந்து பவுண்ட்  அதே ஆண்டு அப்துல் கரீமுடன் காந்தி கப்பலில் புறப்பட்டு டர்பன் துறைமுகத்க்குப் போய்ச் சேர்ந்தார்.அப்துல்லா ஹாஜி, காந்தியை துறைமுகத்துக்கு வந்து வரவேற்றார்.

காந்தியின் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளம் போடுகிறோம் என்பது ஜவேரி சகோதரர்களுக்கு அப்போது தெரியாது. 1897_ம் ஆண்டு காந்தி இந்தியாவுக்குத் திரும்பி, அவரது குடும்பத்தை எஸ்.எஸ். குர்லேன்ட் என்ற கப்பலின் மூலம் டர்பனுக்கு அழைத்து வந்தார். காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் அம்மயார், இரண்டு மகன்கள், காந்தியின் சகோதரி மகன் ஆகியோர் அந்தக் கப்பலில் வந்தனர்.

காந்தி டர்பனுக்குள் நுழைவதை விரும்பாத பிரிட்டிஷ் அரசு, அவரை கப்பலில் இருந்து இறங்க அனுமதிக்கவில்ல.அவரைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று ஜவேரி சகோதரர்கள பிரிட்டிஷ் அரசு நிர்ப்பந்தித்தது. 

ஆனால், ஜவேரி சகோதரர்கள் இணங்கவில்லை. ‘எங்கள் விருந்தாளியாக வந்திருக்கும் காந்தியையும், அவரது குடும்பத்தையும் அனுமதித்தே ஆகவேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்தனர். இருபத்து மூன்று நாட்கள் இழுபறிக்குப் பிறகு டர்பன் துறைமுகத்தில் கால்பதிக்க காந்தி அனுமதிக்கப்பட்டார். இந்தத் தாமதத்தால் கப்பல் கம்பெனி பெரும் நஷ்டமடந்தது.

1906_ம் ஆண்டு காந்தி இந்திய விடுதலையில் மும்முரமாக இறங்கினார்.இவருக்குப் பின்பலம் யார் யார் என்று ஆங்கிலேயர்கள் ஆராயத் தொடங்கினார்கள். அப்போது அப்துல்லா கப்பல் கம்பெனிதான் காந்தியின் அஹிம்சை போராட்டத்துக்கு அடித்தளமாக இருக்கிறது என்பதுஆங்கிலேயர்களுக்குத் தெரியவந்தது

எனவே, அப்துல்லா கப்பல் கம்பெனியின் நான்கு பயணிகள் கப்பலை அங்கங்கே மூழ்கடித்துவிட ஆங்கிலேயர்கள் திட்டம் தீட்டி பல கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன.

இது போன்று பல இன்னல்கள் கொடுக்கப்பட்டது

இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு இருந்ததா ???

என்று நாளை ஆச்சர்யமாக கேள்வி  கேட்ககூடிய நிலை வரலாம்

நாம் நம் பிள்ளைகளுக்கு நம் இஸ்லாமிய வரலாற்றை கூறாமல் இருந்தால் நாளை அந்த கேள்வி தான் வரும்

இப்போதே பலருக்கும் நம் இஸ்லாமியர்களின் தியாகங்கள் தெரிவதில்லை
இன்று நாம் சுவாசிக்கும் இந்தச் சுதந்திரக்காற்று அவ்வளவு எளிதாக நம் அனைவருக்கும்  கிடைத்து விடவில்லை.

*இஸ்லாமியர்களின் தியாகங்கள் தொடரும்*


Tags: இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு

Give Us Your Feedback