Breaking News

இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு உமர் சுப்ஹானி

அட்மின் மீடியா
0
இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு மறைக்கப்பட்ட வரலாறு

உமர் சுப்ஹானி



நம்மில் பலருக்கும் இந்த பெயர் தெரியாது சரித்திரத்தில்  மறைக்கப்பட்டது

தேச விடுதலைக்காக போராடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கமிட்டி இருந்தது.

1921 மார்ச் 31 ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர் நினைவு சுயராஜ் நிதி என்றும் பெயரிடப்பட்டது அந்நிதியில் 60 லட்சத்தை பம்பாயிலும், மீதமுள்ள 40 லட்சத்தை பிற மாநிலங்களிலும் வசூல் செய்ய வேண்டுமென்று காந்திஜி அறிவித்தார். 

லட்சக்கணக்கில் நிதி திரண்டு கொண்டிருந்த அந்நேரத்தில் பம்பாயின் மிகப்பெரிய பஞ்சாலையின் அதிபரான உமர் சுப்ஹானி எனும் ஒரு முஸ்லிம்
 காந்திஜியிடம் நேரில் சென்று, திலகர் நினைவு நிதிக்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.


காசோலையை கையில் வாங்கிய காந்திஜியின் கண்கள் அதில் நிரப்பப்பட்டிருந்த தொகையை வாசித்தபோது ஆச்சரியத்தால் விரிந்தது.
காங்கிரஸ் கமிட்டியின் நிதி திரட்டும் திட்டத்தை ஒருவரே நிறைவேற்றித் தருகிறாரே என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், சுதந்திரப் போராட்ட நிதி என்பதால் அதில் பலரது பங்களிப்பும் இருந்தால்தான் அது சிறப்புடையதாக அமையும் என்று காந்திஜி கருதினார். 

எனவே அக் காசோலையை உமர் சுப்ஹானியிடமே திருப்பிக் கொடுத்து, சில லட்சங்கள் மட்டும் வழங்கும்படி கேட்டுக்கொண்டார். 

காந்திஜியின் விருப்பப்படி சில லட்சங்களை வழங்கினார் உமர் சுப்ஹானி.
ஒரு கோடி ரூபாயை திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்கு உமர் சுஹானி வழங்க முன்வந்த செய்தி ஆங்கில அரசுக்கு எட்டுகிறது. சும்மா இருப்பார்களா அவர்கள்?! 

பம்பாயின் மாகாண வைஸ்ராய் உடனடியாக உமர் சுப்ஹானியின் தொழிலை முடக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறார். அந்நிய துணி பகிஷ்கரிப்புப் போராட்டம் முனைப்புடன் நடந்து கொண்டிருந்தபோது, "அந்நியத் துணிகளை உங்கள் பஞ்சாலையில் வைத்து எரியூட்டலாமா?" என்று காந்திஜி உமர் சுப்ஹானியிடம் கேட்டபோது, "என் பஞ்சாலை இதைவிட வேறு ஒரு நல்ல காரியத்துக்காகவா பயன்படப்போகிறது" என்று பதிலளித்தார் அவர்.

அந்நியத் துணிகளைத் தீயிட்டு எரிக்கும்  எழுச்சிமிக்க நிகழ்ச்சி காந்திஜி தலைமையில் உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் நடைபெற்றது. ஆங்கில அரசால் தனது தொழிலுக்கு மேலும் இடைஞ்சல் வரும் எனத் தெரிந்தும்,
தன் பஞ்சாலையில் அந்நியத் துணிகளை எரியூட்டும் களமாக அமைத்துக் கொடுத்ததோடு, தன்னிடமுள்ள 30 ஆயிரம் மதிப்புள்ள அந்நியத் துணிகளையும் எரியூட்ட வழங்கினார்.

அந்நியத் துணி பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு களம் அமைத்துக் கொடுத்ததற்காக உமர் சுப்ஹானிக்கு பிரிட்டிஷ் அரசு கொடுத்த இன்னல்கள் ஏராளம். 

இன்று இந்தியா சுதந்திரம் அடைந்து பல வருடங்களை அடைந்தும் அதற்க்கும் இஸ்லாமியர்களுக்கும் சம்மந்தமில்லை என்று   இருட்டடிக்கப்பட்டுவிட்டது.
தேச விடுதலைக்காக  இஸ்லாமியர்கள் செய்த தியாகங்கள் சொல்லி மாளாது
அதன் உன்மையான வரலாறுகளை மறைத்து விட்டார்கள் அதுவும் முஸ்லீம்கள் என்றால் சுதந்திரத்திற்க்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை என்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள் அது நமக்கு மிகுந்த மன வேதனையை தருகிறது.

தியாகங்கள் தொடரும்



Tags: இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு

Give Us Your Feedback