Breaking News

இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு கைர் முஹம்மது

அட்மின் மீடியா
0
இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு மறைக்கப்பட்ட வரலாறு

கைர் முஹம்மது



நம்மில் பலருக்கும் இந்த பெயர் தெரியாது​

1922 –ஆம் ஆண்டு சிந்து மாகாணம் மட்லி நகரில் பெரும் திரளான கூட்டம் நடைபெறுகின்றது அந்த கூட்டத்தில் சிறுவன் ஒருவன் உரையாற்றுகின்றான். அவன் பேச்சில் சுதந்திரத் தாகம் தெறிக்கின்றது, ஆங்கிலேயரின் மீதான வெறுப்பு அனலாய் பறக்கின்றது அந்நியருக்கெதிராக  நாட்டைப் பாதுகாக்க, அனைவரும் ஒன்றுதிரட்டிய அந்த சிறுவன் பற்றிய தகவல் ஆங்கிலேயருக்குச் செல்கிறது. 

கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள். அந்தச் சிறுவன் தான் 11 வயது நிரம்பிய கைர் முஹம்மது

தலை மட்டும் வெளியே தெரியும் படி குற்றவாளிக் கூண்டில் நின்ற கைர் முஹம்மதுவைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட நீதிபதி…

நீதிபதி: உன் பெயர் என்ன?

கைர் முஹம்மது: “ஆஸாத்” (ஆஸாத் என்றால் விடுதலை என்று பொருள்) சிறுவனிடம் இருந்து தெறித்த உறுதியான பதில்.

நீதிபதி: உன் தந்தையின் பெயர் என்ன?

கைர் முஹம்மத்: ”இஸ்லாம்”

நீதிபதி: உன் ஜாதி என்ன?

கைர் முஹம்மது: “ஒத்துழையாமை!” (இந்த பதில் நீதிபதிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.)

நீதிபதி: உன் தொழில் என்ன?

கைர் முஹம்மது: ”ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் புரட்சியைத் தூண்டுவது” என்று கூறும் போது சிறுவனின் குரலில் கம்பீரமும் மிடுக்கும் இருந்தது.

(அன்றைய கால கட்டத்தில் புரட்சி செய்வது, புரட்சியைத் தூண்டுவது ராஜ துரோக குற்றமாகும். மரண தண்டனைக் கூட தீர்ப்பாக வழங்கப்பட்டுள்ளது.)

நீதிபதி: உனக்கு (ஜாமீன்) பிணையாள் யார்?

கைர் முஹம்மது: ”எனது பிணையாள் அல்லாஹ் ஒருவன் தான்” என உறுதியுடன் கூறினான்.

நீதிபதி: உன் செயலுக்காக நீ வருந்தி மன்னிப்புக் கோருகின்றாயா?

கைர் முஹம்மது: ”ஒரு குற்றமும் செய்யாத நான் எதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும்?

நான் ஓர் இந்தியக் குடிமகன் என்ற நிலையில் என் கடமையைத் தானே செய்தேன்?

மன்னிப்புக் கேட்க மறுத்து விட்டதால் சில மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

(நூல்: சிந்தனைச் சரம், அக்டோபர் – 1997, அபூ ஹாரிஸ் டாக்டர் பீ. ஹாமித் அப்துல் ஹை அவர்கள் எழுதிய நீதி விசாரணை எனும் கட்டுரையிலிருந்து…) 

இந்த நிகழ்வு நம்மில் பலருக்கும் தெரியாது

அன்று பிறந்த குழந்தைக்கும் சுதந்திர தாகம் இருந்தது என்று கூட  சொல்லலாம்

இந்த தேசத்தின் விடுதலைக்கும், உயர்வுக்கும், முன்னேற்றத்திற்கும் எல்லா வகையிலும் முஸ்லிம்களே முன்னோடிகளாக திகழ்ந்திருக்கின்றார்கள் என்பதை முஸ்லிம்களே அறிந்து வைத்திருக்க வில்லை” என்பது தான்.

*​தியாகங்கள் தொடரும்​*

Tags: இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு

Give Us Your Feedback