Breaking News

இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு உலமாக்களின் பங்கு

அட்மின் மீடியா
0
இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு ​​​​மறைக்கப்பட்ட வரலாறு​​​

உலமாக்களின் பங்கு

நம்மில் பலருக்கும் இந்த வரலாறு தெரியாது​​​




நாட்டில் யாராவது பிரச்சாரம்செய்தால் சிறை தண்டனை அமலில் இருந்தது.யாருமே பிரச்சாரம்செய்ய முன் வராத நேரத்தில் பள்ளிவாசல்களில்
ஜும்மாசொற்பொழிவை பிரச்சாரகளமாக மாற்றிய சமூகம் நம் சமூகம் இதனை அறிந்த ஆங்கிலேயர்களால் பள்ளிவாசல்களிலேயே சுடப்பட்டு  இன்னுயிரையும் தியாகம் செய்த வீரர்கள் நம் உலமாக்கள்


பழங்கால பள்ளிவாசல்களில் நம் முன்னோர்கள் மற்றும் உலமாக்கள் ரத்தகறை இல்லாத பள்ளி வாசல் கிடையாது என்ற வரலாறு தெரியுமா உங்களுக்கு 

இந்திய தேசத்தின் விடுதலைப்போரில் நம்  பள்ளிவாசல்கள் கூட ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பயன்படுத்திய சமுதாயம் நம்  இஸ்லாமிய சமுதாயம் மட்டும் தான் என்பதை மறந்துவிட்டிறீர்களா இந்திய தேசத்தின் விடுதலையில் இஸ்லாமிய சிறுவர்கள்,  இளைஞர்கள், முதியோர்கள், பெண்கள்  செல்வந்தர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பணியாற்றிடும் வாய்ப்பை பெற்றுத் தந்தவர்கள் ஆலிம்கள்.

அதற்காக பள்ளிவாசல் ஜூம்மா மேடைகளையும் விட்டுவைக்கவில்லை
வெள்ளிக் கிழமை ஜூம்மா மேடைகள் எல்லாம் ஆங்கிலேயனுக்கு  எதிராக போர்ப் பரணி பாடின.. 

ஜூம்மா மேடைகளில் உரமேற்றியதன் விளைவு  வீரத்துடன் இந்த சமுதாயம் வெள்ளையனை எதிர்த்துப் போராடியது


வெள்ளையனின் உடை கலாச்சாரம், மொழி போன்றவை ஹராம் என பத்வாக்கள் அளித்தனர்

தேவ்பந்த் உலமாக்கள் *ஆங்கிலம் படிப்பது ஹராம்* என்று ஃபத்வா வழங்கினார்கள்.

ஷாஹ் அப்துல் அஜீஸ் தெஹ்லவி அவர்கள் இந்த தேசத்தை *யுத்த பூமி என்று ஃபத்வா வழங்கினார்கள்.

தமிழகத்தின் அப்துல் ஹமீது பாகவீ அவர்கள் கதர் அணியாத மணமக்கள் மணமக்களின் வீட்டார் திருமணங்களில் கலந்து கொள்வதில்லை
என்று அறிவித்தார்கள்.

மௌலானா முஹம்மதலி அவர்கள் 1921 ஜூலையில் கராச்சியில் நடைபெற்ற கிலாஃபத் மாநாட்டின் தலைமை உரையில் ஆங்கிலேயே இராணுவத்தில் சேர்வது ஹராம் என்று ஃபத்வா வழங்கினார்கள்.

 மேலும் ஆங்கிலேயர்களின் உடை, கலாச்சாரம், மொழி ஆகியவைகளை பின்பற்றுவது ஹராம் என்று தேவ்பந்த் உலமாக்கள் ஃபத்வா வழங்கினார்கள்.

மௌலவி காசிம் நானோத்தவி ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்டுவது மார்க்கக் கடமை*என ஃபத்வா வழங்கினார்கள்.

அது மட்டும் அல்லாமல் *சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான உதவி* எனும் பெயரில் ஒரு நூலையே அவர்கள் தொகுத்து வெளியிட்டார்கள்.

அதோடு இல்லாமல் தங்கள் உயிரையையும் பொருட்படுத்தாமல் போரிலும் கலந்து கொண்டார்கள் 1831 மே 6-ல் நடைபெற்ற பாலகோட் யுத்தத்தில் ஆயிரக்கணக்கான உலமாக்கள் உயிரிழந்தனர்.

இந்திய இஸ்லாமியர்களை அழித்துவிட்டால் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் வலுவடையும் என்று திட்டம் தீட்டும் அளவிற்க்கு  ஆங்கிலேயர்கள் வந்துவிட்டார்கள் அதனையும்  செயல்படுத்தினார்கள் டெல்லி பெஷாவர் பிரதான வீதியில் இருபக்கத்தில் உள்ள மரங்களில் உலமாக்களில் உடல்கள் தொங்க விடப்பட்டியிருந்தன 

சடலங்கள் இல்லாத எந்த மரத்தையும் காணமுடியவில்லை பள்ளிவாசல் உள்ளேயே பல ஆலீம்கள் தூக்கிலடப்பட்டார்கள். இந்த தேசத்தின் விடுதலைக்காக போராடிய உலமாக்கள் பலர் வீர மரணம் அடைந்த போது, அவர்களது ஜனாஸாவைப் பொதிந்த கஃபன் துணி முழுக்க இரத்தக்கரை படிந்ததாகவே அமைந்திருந்தது.

மௌலானா முஹம்மது அலி அவர்கள் தங்களின் ஹஜ்ஜின் போது கஅபாவின் திரைச்சீலையைப் பிடித்த படி இப்படித் துஆ செய்தார்களாம்!

”இறைவா! என் இந்திய தேசத்திற்கு சுதந்திரத்தைத் தா!
சுதந்திர இந்தியாவில் இஸ்லாத்திற்கு வாழ்வைத் தா!” என்று.....

இஸ்லாமும், முஸ்லிம்களும் எங்கெல்லாம் பிரவேசம் செய்தார்களோ,
அங்கெல்லாம் அடிமைச் சிந்தனையில் *ஆழ்ந்திருந்தவர்களை தட்டியெழுப்பினார்கள் நம் உலமாக்கள்*

கொடுங்கோலர்களின் கொட்டங்களை அடக்கினார்கள்.
புரட்சி விதைகளை விதைத்து சமுதாய விடுதலையை பெற்றுக் கொடுத்தார்கள் நம் உலமாக்கள் என்று சொல்லலாம்.

இந்திய விடுதலைப் போரில் வீரமீகு உலமாக்கள் ஆற்றிய பங்களிப்பைப் பற்றி ஆய்வு செய்து முழுமையாகவும், விரிவாகவும் தனி நூலே எழுதலாம்
ஆலிம்கள் நாட்டு விடுதலைக்கு ஆற்றிய தியாகத்தையும் அகிலம் அறியச் செய்ய வேண்டும். உண்மை வரலாற்றை பாதுகாக்க உறுதியெடுப்போம். சுதந்திரத்தில் நம் உலமாக்கள் பங்கு இன்றிமையாதது*


*​​​​தியாகங்கள் தொடரும்​​​​*

Tags: இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு

Give Us Your Feedback