Breaking News

இந்திய சுதந்திரத்தில் முஸ்லீம்களின் பங்கு அல்லாமா இக்பால்

அட்மின் மீடியா
0
இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு மறைக்கப்பட்ட வரலாறு

அல்லாமா இக்பால் 



நம்மில் பலருக்கும் இந்த பெயர் தெரியாது​ சரித்திரத்தில்  மறைக்கப்பட்டது



ஆனால் இதை எழுதியவர் "அல்லாமா இக்பால்" என்ற ஒர் இஸ்லாமியர் என்று நம்மில் சிலருக்கே தெரியும்.

அல்லாமா இக்பால் அவர்கள் இந்தப் பாடலை 1904 இல் எழுதினார். இந்த பாடலுக்கு தமிழில் இந்திய கீதம் என்று பெயர் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று நமது நாடு ஆங்கிலேயர்களை விரட்டி அடித்து சுதந்திரம் அடைந்தபோது டெல்லி அரசியல் நிர்ணய சபையில் பாடப்பட்ட முதல் பாடல் இதுதான்

நேரு அவர்கள் இருந்த வரை இந்த பாடல் தான் அதிகமாக நாடாளுமன்றத்தில் அதிகம் ஒலித்தது அதன் பிறகு அரசியல் சூழ்ச்சியால்  இந்தபாடலுக்கு பதில்
ஜனகனமன பாடல் இந்திய தேசியகீதம் ஆனது.

அவரது புரட்சி கவிதை ஒன்று நமக்காக

உனக்கு வரலாறு என்றால்
என்ன என்பது தெரியுமா? 

அல்லது உன்னைப் பற்றியாவது
உனக்குத் தெரியுமா?

அது ஒரு வெறும் கற்பனை- புராணக் கதை
என்று நீ எண்ணுகிறாயா?

இல்லை! அது உன்னைப் பற்றி நீயே அறியத் துணைபுரிகின்றது.

உனது வாழ்வின் நோக்கத்தை தெளிவுபடுத்தி
உன் சாதனைகளுக்கான பாதையை
அமைத்துத் தருகின்றது. 

அது வாளைப்போன்று
உன்னைக் கூர்மையாக்குகின்றது. 

பின்னர் அது உன்னை
உலகத்துடன் போராட வைக்கின்றது.

அது நன்கு பயிற்றுவிக்கப்பட்ட
கண்களைப் போன்றது. 

இறந்த காலத்தை வாசித்து
மீண்டும் அதனை சிருஷ்டித்து
உனக்கு முன்னால் அது சமர்ப்பிக்கிறது

உன் கடந்த காலம் நிகழ்காலமாய்
வெடித்து
அதிலிருந்து உன் எதிர்காலம் உருவாகிறது.

நித்திய வாழ்க்கை நீ வாழ விரும்பின்,
உன் இறந்த காலத்தை
நிகழ் காலத்திலிருந்தும்
எதிர்காலத்திலிருந்தும் துண்டித்து விடாதே!” 

இந்த வரலாற்று கவிதை எந்த கால சூழ்நிலைக்கும் ஏற்றார் போல் உள்ளது தான் இதன் தனி சிறப்பு

இந்திய மண்ணிலிருந்து ஆங்கிலேயர்களை விரட்டிட  போராட்டத்தில், சிறையில் அடைப்பட்டு,  தூக்குக் கயிற்றை துச்சமென மதித்து உயிர்த் தியாகம் செய்தவர்கள் நம் முன்னோர்கள்.

அவர்களின் ​தியாகங்கள் தொடரும்​

Tags: இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு

Give Us Your Feedback