Breaking News

இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமிய பெண்களின் பங்கு அஜிஜன்

அட்மின் மீடியா
0
இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமிய பெண்களின் பங்கு மறைக்கப்பட்ட வரலாறு

அஜிஜன் வீரமங்கை 





அஜிஜன் பேரை கேட்டாலே பிரிட்டிஷார் அலறுவார்களாம் அஜிஜன் லக்னோவில் பிறந்தவர் நானா ஸாஹிப் அவர்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்காக அனைத்து மக்களும் மத பாகுபாடு இன்றி ஒன்றினைந்து போரட வேண்டி, இந்து முஸ்லிம் மக்களை ஒற்றுமைக்காக அழைத்தார்

 நானும் போராடசெல்வேன் என்று வீட்டாரிடம் கூறியபோது  பெண்கள் ரோட்டில் போராடுவதா என்று  போராட்டத்தில் கலந்து கொள்ள வீட்டார் அனுமதிக்கவில்லை வீட்டார் பேச்சை கேட்காமல் வீட்டில் முடங்கி கிடப்பதை விட  2 பிரிட்டிஷ்காரனை கத்தியால் குத்திவிட்டு நாட்டுக்காக உயிரை விடுவதே மேல்என்று நாட்டிற்காக இவர் வீட்டை விட்டு வெளியே வந்து சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டார்


தன் ஒருத்தியின் வாழ்க்கை பல பேருக்கு உதவ வேண்டும் என்று நினைத்தவர்.பெண்கள் அனைவரையும் போரடத்திற்க்கு  தயார்படுத்தியவர்,பெண்களுக்கு ஆயுதங்களை பயன்படுத்த கற்றுக் கொடுத்தவர்.பிரிட்ஷ்க்காரர்களின் ரகசியங்களை ஒன்று திரட்டி சுதந்திர போராட்ட வீரர்களுக்கு  அனுப்புவராக பணி புரிந்தவர்.இறுதியாக பிரிட்டிஷ் அரசாங்கம் இவர்களை சிறை பிடித்தார்கள்அப்போது பிரிட்டிஷார் இனிமேல் போராட்டத்தில் கலந்து கொள்ளமாட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொல் உனக்கு மன்னிப்பு அளிக்கின்றோம் என்று கூறியதற்க்கு பிரிட்டிஷாரின் மன்னிப்பை ஏற்க மறுத்து, உயிர் தியாகம் செய்வதே மேல் என்று முழக்கமிட்ட வீர மங்கை


*இஸ்லாமியர்களின் தியாக வரலாறு  தொடரும்*


Tags: இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு

Give Us Your Feedback