Breaking News

இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமிய பெண்களின் பங்கு அபாடி பேகம்

அட்மின் மீடியா
0
இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமிய பெண்களின் பங்கு



இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம் பெண்களும் தங்கள் வீரத்தை, உயிர் தியாகத்தை, அறிவை  பலத்தை உபயோகபடுத்தியது
நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?


ஆங்கிலேயனுக்கு அடிமையாக  இருந்த இந்தியாவை மீட்டெடுக்க போராடிய ஓர் வீரமிக்க இஸ்லாமிய பெண்ணின்  வரலாற்றை பார்ப்போம்

அபாடி பேகம் புரட்சி பெண்


துணிச்சல் என்ற வார்த்தைக்கு சொந்தகாரர்

வர்த்தகம் செய்ய வந்த ஆங்கிலேயருக்கு இந்த மண்ணின் வளத்தை நிரந்தரமாய் அனுபவிக்கும் எண்ணம் ஆசையாய் உருவானது. நாடோடியாய் வந்தவனுக்கு  நாடாள ஆசையா என்று  மிக துணிந்து போராடிய பெண்மணிகளில் இவரும் ஒருவர்.   சுதந்திர போராட்டம் என்றால் முதல் ஆளாய் நிற்பவர் இவர்தான்

போராட்டத்தில் இவருடைய மகன் முகமது அலி 1921-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கைது செய்துவிட்டார்கள்  பின்னர் பொது மன்னிப்பில் சிறையை விட்டு தன் மகன் வெளியே வருவதாக கேள்விபட்ட பி அம்மா உரைத்த பதில்,

முஹம்மது அலி வெறும் சாதாரண மனிதன் அல்ல,அவன் இஸ்லாத்தின் மகன், அவனால் ஒரு போதும் மற்றவர்கள் கொடுக்கும் மன்னிப்பு பிச்சையில் வருவதை சிந்திக்க முடியாது. ஒரு வேலை அவன் அதை விரும்பினாலும் இந்த வயது முதிர்ந்த தாயின் கைகள் பலம் இழந்து கிடந்தாலும் அவனை எதிர் கொள்ள இது பலம் பெறும்” என்று உரைத்தவர்.

ஆங்கிலேய  பிடியில் இருந்து தன் தாய்நாட்டை காப்பற்ற அயராது உழைத்தவர். சுதந்திரத்திற்காக போராடியவர்களுடன் மிக துணிந்து செயல்பட்டவர். அவர்கள் அயல் நாட்டின் ஆடைகளை அணிவதை தவிர்த்து மற்றவர்களையும் கதர் துணியை அணிய வைக்க முயற்சித்தவர். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக பெரிதும் போராடியவர், 

இத்துணை போராட்டத்திலும் தன்னுடைய ஈமானை ஒருபோதும் தளர விடாதவர்.

தியாகங்கள் தொடரும்*


Tags: இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு

Give Us Your Feedback