Breaking News

இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு கருத்த ராவுத்தர்

அட்மின் மீடியா
0
*இந்திய  சுதந்திர போராட்டத்தில்  இஸ்லாமியர்களின் பங்கு

மறைக்கப்பட்ட வரலாறு பலரும் மறந்துவிட்ட வரலாறு

முகம்மது மீரான் என்ற ஹாஜி கருத்த ராவுத்தர்





மக்கள் சந்திப்பு,
குறு நாடகங்கள், 
பொதுக்கூட்டங்கள்,
போராட்டங்கள் என்று
இந்திய சுதந்திர போராட்டத்தை வழிநடத்த சுதேசி இயக்கத்திற்க்கு  பொருளாதார உதவி  அதிகமாக தேவைப்பட்டது

 மதுரை பெரியகுளம் தாலுகா பகுதிகளிலும் உத்தமபாளையம் சுற்று வட்டாரங்களில்  சுதந்திர போராட்டத்திற்க்கான பொருளாதார அனைத்து உதவிகளையும் முகம்மது மீரான் என்ற ஹாஜி கருத்த ராவுத்தர் கொடுத்து உதவினார்.

சுதேசி இயக்கத்தின் எழுச்சியை வீழ்த்துவதற்காக  கதர் விற்பனையை ஆங்கிலேய  அரசு தடை விதித்தது. இதனால் சுதேசி இயக்கம் அப்பகுதிகளில் துவண்டுவிடாமல் காக்க தானே ஒரு கதர் விற்பனை நிலையத்தை உத்தமபாளையத்தில் துவக்கினார்.

பூனாவிலிருந்து கதர் ஆடைகளை வரவைத்து மக்களுக்குத் தடையின்றி கதர் துணி கிடைக்க ஆங்கிலேய அரசின் தடையை மீறி வழிவகுத்தார்.

சத்தியாகிரக போரட்டத்தில்  பங்கேற்றதற்காக ஆங்கிலேய
அரசு இவருக்கு 500 ரூபாய் அபராதமும் சிறைத்தண்டனையும் வழங்கியது. தேச விடுதலைக்காக மதுரைசிறையிலும் பின்னர் அலிப்பூர் சிறையிலும் வாடினார். சிறையில் இருந்து வந்ததும்  பெரியகுளம் தாலுகா அளவிலான காங்கிரஸ் மாநாட்டினை நடத்தும் முழுப் பொறுப்பினையும் தன் சொந்த செலவில் ஏற்றார். 

இவரை போல் பல இஸ்லாமியர்கள் தம் உயிரையும் உடமைகளையும் கொடுத்து வாங்கிகொடுத்த சுதந்திரம்

இஸ்லாமியர்களின் தியாகங்கள் தொடரும்


Tags: இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு

Give Us Your Feedback