Breaking News

இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு ஹாஜி ஷரியத்துல்லா

அட்மின் மீடியா
0
இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு

மறைக்கப்பட்ட வரலாறு பலரும் மறந்துவிட்ட வரலாறு

ஹாஜி ஷரியத்துல்லா





முதல்  மக்கள் இயக்கம்  19-ஆம் நூற்றாண்டில் சாதாரண விவசாயக் கூலிகளை ஒன்று திரட்டி பெரய்ஸி இயக்கம்(Farizis Movement) என்ற மக்கள் இயக்கததைக் கூட்டியவர் 

கிழக்கு  வங்காளத்தில் வாழ்ந்த ஹாஜி ஷரியத்துல்லா ஆவார்.
ஜமீன்தார்களின்  கொடுமைக்கு ஆளாகும் விவசாயிகளின் குடி உரிமைகளுக்காகப போராடியவர்.


ஜமீன்தார்களின்  அடக்குமுறைகளுக்கு ஆளான விவசாயிகளும் விவசாயக்கூலிகளும் தங்கள் முதலீடுகளையும் உழைப்பையும் வரி என்ற பெயரில் பறி கொடுத்துக்கொண்டிருந்தனர்.

உரிமை இழந்து வந்த இம்மக்களை ஒன்று திரட்டி, பரிதாபூரை மையப்படுத்தி ஹாஜி ஷரியத்துல்லாவும் அவர் மகன் தத்தோமியானும் நடத்திய மக்கள் இயக்கம்தான் பெரய்ஸி இயக்கம். 

இவர்களின் ஜமீன் எதிர்ப்பு நாளடைவில் ஜமீன் எஜமானர்களான பிரிட்டீஷாருக்கு எதிரான கிளர்ச்சியாக வெடித்தது. 

1839 முதல் 1857 வரை 18 ஆண்டுகள் இவ்வியக்கம் ஆங்கிலேயருக்குப் பல சிக்கல்களையும் இழப்புகளையும் ஏற்படுத்தியது.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தத்தோமியான், புரட்சியைத் தூண்டியவர் என குற்றம் சுமத்தப்பட்டு 1860 - இல் தூக்கிலிடப்பட்டார்.

சாதாரண விவசாயக் கூலிகளை ஒன்று திரட்டி பிரிட்டீஷாருக்கு எதிராக நடைபெற்ற பெரய்ஸி இயக்கம்தான் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முதல் மக்கள் இயக்கம் என்பதை நம் *புதிய வரலாறு பதிவு செய்யட்டும்* 

இஸ்லாமியர்களின் தியாகங்கள் தொடரும்


Tags: இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு

Give Us Your Feedback