Breaking News

இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு டாக்டர் சைபுதீன் கிச்சலு

அட்மின் மீடியா
0
இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு
மறைக்கப்பட்ட வரலாறு பலரும் மறந்துவிட்ட வரலாறு

டாக்டர் சைபுதீன் கிச்சலு




இந்திய மக்களை ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர்கள் பல அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்தனர். 

அவற்றுள் மிகக் கொடுமையானது 'ரௌலட் சட்டம்'. இந்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியாவெங்கும் பெரும் கிளர்ச்சி மூண்டது.  

விடுதலை போராட்ட வீரர் என்று  சந்தேகப்படும் யாரையும் வாரண்ட் இன்றி கைது செய்யலாம். எவ்வளவு காலம் வேண்டுமானாலும் சிறை வைக்கலாம். காரணம் காட்டத் தேவை யில்லை. எந்த வீட்டையும் போலீஸ் வாரண்ட் இன்றி சோதனை போடலாம்.


வழக்கறிஞர் வைத்துக்கொள்ளவோ வாதாடவோ முடியாது.இப்படி பல ஷரத்துக் கள்... சட்ட ஆட்சியின் அடிப்படையே நொறுக்கப்பட்டது. இந்தச் சட்டங்கள் தேவையற்றவை, மான முள்ள இந்தியர்களால் இவற்றை ஏற்கமுடி யாது” என்று காந்தி கூறினார். 

மக்களின் அடிப்படை உரிமைகள் மீதான இந்த தாக்குதலைக் கண்டித்து ஒரு புதிய வழியில் போராட வேண்டுமென்று காந்தி அறைகூவல் விடுத் தார். ஒத்துழையாமை இயக்கம் நடத்துவது என்பதே அது.

1919 பிப்ரவரியில் அவர் சத்தியாகிரக சபை ஒன்றை நடத்தினார். நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேரடி எதிர்ப்பு நடவடிக்கைகள் துவங் கியது, 1919 ஏப்ரல் 6 ல் ‘பந்த்’ நடத்த அறை கூவல் விடப்பட்டது.   அன்று நாடு முழுவதும் உண்ணாவிரதமும், பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டன. 

பஞ்சாப்பில் பம்பரமாக சுழன்று தீவீரமாக செயலாற்றி வெள்ளையர்களுக்கு தண்ணி காட்டியவர் தான் டாக்டர் சைபுதீன் கிச்சலு   இந்த இடத்தில் போராட்டம் என்று அறிவிப்பு வரும் போலிஸூம் இராணுவமும் அங்கு வரும் ஆனால் வேறு இடத்தில் போராட்டம் நடக்கும் இவர் தீட்டிய திட்டப்படி போராட்டம் நடந்தது. 

இதன் பின்னனியில் டாக்டர் சைபுதீன் கிச்சலு இருப்பதை தெரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள் இவரை கைது செய்து  அமிர்தஸரசிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த தர்மசாலா என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றது. இதனை அறிந்த மக்கள் கொதிப்படைந்தனர்.  பஞ்சாப்பில் கிளர்ச்சி பரவியது. 

பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது. ராணுவச் சிப்பாய்கள் துப்பாக்கிகளுடன் பஞ்சாப் நகரங்களில் ரோந்துவந்தனர்.போலீஸ் ஆணை ஆணையர் அலுவலகத்திற்கு அவர்கள் பெருந்திரளாகச் சென்றனர்.அந்த மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் புரட்சி செய்தனர். இதில் ராபின்சன், சார்ஜண்ட் ரௌலண்ட் என்னும் இரு ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர்.
அதன் பின்பு ஜாலியன் வாலாபாக் படுகொலைபலத்த எதிர்ப்புக்கு பிறகு ரௌலட் சட்டம் திரும்பபெற்றார்கள்

 இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்கள்  பங்கை மறந்து விட்டவர்களுக்கு நினைவு படுத்துங்கள்

*இஸ்லாமியர்களின் தியாகங்கள் தொடரும்*

Tags: இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு

Give Us Your Feedback