Breaking News

இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு அமீர் ஹம்சா

அட்மின் மீடியா
0
அமீர் ஹம்சா



இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு

நம்மில் பலருக்கும் இந்த பெயர் தெரியாது

 சரித்திரத்தில்  திட்டமிட்டு  மறைக்கப்பட்ட வரலாறு*

பிரிட்டீஷாரால் நாடுகடத்தப்பட்ட வங்கத்தைச் சார்ந்த ராஷ்பிஹாரி போஸ் ஆரம்பித்தஇந்திய சுதந்திர லீக்அமைப்பில் தன்னை முதல் நபராகப் பதிவு செய்தார்

தேசிய உணர்வால் தூண்டப்பட்டு தனது 21 வயதில் இந்திய தேசிய ராணுவத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர் *எம்.கே.எம்.அமீர் ஹம்சா

பின்னர் நேதாஜிபுரட்சிப் படைக்குத் தலைமை ஏற்ற போது அதிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்

இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியதற்காகப் ஆங்கிலேயர்கள் விதித்த மரண தண்டனையிலிருந்து தப்பியவர்

1943 – இல் நேதாஜி ரங்கூனுக்கு முதலில் சென்றபோது நடந்த விழாவில் அவருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளைப் போராட்ட நிதிக்காக ஏலம் விட்டனர் அம்மாலைகளில் ஒன்றை மூன்று லட்சம் ரூபாக்கு ஏலத்தில் எடுத்தார்

இந்திய தேசிய ராணுவத்தில் *அமீர் ஹம்சா* பணியாற்றியதைப் பாசத்தின் காரணமாக அவரது தந்தை விரும்பவில்லை   எம்.கே.எம்.அமீர் ஹம்சாவை வீட்டில் பூட்டிவைத்துவிட்டார்

இதனை அறிந்த நேதாஜி அமீர் ஹம்சாவை யும் அவரது தந்தையையும் வரவழைத்து நாடு சுதந்திரம் அடைய வேண்டிய அவசியத்தை உணர்ச்சிப் பொங்க எடுத்துரைத்தார்.

நேதாஜியின் உரையாடலைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்ட எம்.கே.எம்.அமீர் ஹம்சா அவர்களின் தந்தை தனது சட்டைப் பையிலிருந்த காசோலைப் புத்தகத்தை எடுத்து இரண்டு லட்சத்து முப்பதாயிரத்துக்கான ஒரு காசோலையை எழுதி நேதாஜியிடம் கொடுத்ததோடு தன் மகன்  எம்.கே.எம்.அமீர் ஹம்சா வை முழுமையாக நாட்டுக்காக நேதாஜியிடம் ஒப்படைத்தார்



தனது செல்வத்தை எல்லாம் நேதாஜியின் சுதந்திரப் பணிக்கு வழங்கிவிட்டு நேதாஜி தனக்கு வழங்கிய சட்டைத் துணியை கடைசி வரை பாதிகாத்து வைத்திருந்தார் இந்த தியாக செம்மல்​எம்.கே.எம்.அமீர் ஹம்சா

இதுவரை பள்ளி பாடங்களில் இல்லாத வரலாறு

நம்மில் பலருக்கும் தெரியாத வரலாறு

வரலாறில் அறியாத ஆச்சர்யங்கள் இன்னும்
நிறைய உள்ளது!

           *இஸ்லாமியர்களின் தியாகங்கள் தொடரும்​*


Tags: இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு

Give Us Your Feedback