Breaking News

இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு தீத்தோ மியான்

அட்மின் மீடியா
0

தீத்தோ மியான்


இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு

திட்டமிட்டு மறைக்கபட்ட வரலாறு




விவசாயிகளின் வேதனைகளை பார்த்து மிகவும் துயரம் கொண்டார் வயலில் கஷ்டப்பட்டு பாடுபட்டு உழைக்கும் மக்களை அடிமைபடுத்தி அதனுடைய பலனை மட்டும் ஆங்கிலேயர்களும் ஜமீன்தார்களும்  சுரண்டிக் கொண்டு இருப்பதை பார்த்து சூறாவளியாய் புறப்பட்டார்

நிலம் அனைத்தும் இறைவனுக்கே சொந்தம் ஆகவே ஆங்கிலேயருக்கு யாரும் வரி செலுத்த வேண்டாம் என்று கூறி  இறைவழி நின்று போர் நடத்தியவர் தான்  தீத்தோ மியான்

இறைவழி நின்று நாட்டுக்காக போராட தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர் தான்

ஆங்கிலேயர்களுக்கு எதிராக வரிகொடா இயக்கத்தை நடத்தினார்



கிராமங்கள் தோறும் நீதிமன்றங்களை அமைத்து நீதி வழங்க ஏற்பாடு செய்தார்

ஜமீன்தார்கள் மற்றும் ஆங்கிலேயரின் கொடுமைகளில் இருந்து மக்களை விடுவிக்க இறைவழியில் மக்களை திரட்டினார்

வங்கம் முழுவதும் ஆதரவு பெருகியது

கிராமங்களில் வாழ்ந்த மக்கள் அனைவரும் அவர் பின்னால் அணிதிரண்டனர்

கிராமங்கள் தோறும் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒவ்வொரு தலைவர்களை நியமித்தார்

வங்காளதேசத்தில் சுயராஜ்ஜிய நிர்வாகம் என்ற பெயரில் நிர்வாகம் நடத்தினார்

ஆங்கிலேயர்கள் அவர் மீது  கொலை கொள்ளை கடத்தல் என பல வழக்குகள் தொடுத்தனர்.

அவர் மீது ஆத்திரம் அடைந்த உள்ளூர் ஜமீன்தார்கள் ஆங்கிலேயரின் உதவியுடன் அவர் மீது போர் தொடுத்தார்கள்

வீரத்துடன் போர் செய்த தீத்தோ மியான்  ஆங்கிலேயர்களால் போரில்  வீரமரணம் அடைந்தார்

இதுவரை எந்த பள்ளி பாடங்களில் இல்லாத வரலாறு

நம்மில் பலருக்கும் தெரியாத வரலாறு

வரலாறில் நாம்  அறியாத ஆச்சர்யங்கள் இன்னும்  நிறைய உள்ளது

        இஸ்லாமியர்களின் தியாகங்கள் தொடரும்


Tags: இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு

Give Us Your Feedback