Breaking News

இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்குஅப்துல் காதர்

அட்மின் மீடியா
0

அப்துல் காதர்

 

 

 



இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு

நம்மில் பலருக்கும் இந்த பெயர் தெரியாது​

சரித்திரத்தில்  திட்டமிட்டு  மறைக்கப்பட்ட வரலாறு


நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் ஒற்றர் படைப்பிரிவு மலேசியாவிலுள்ள பினாங்கு தீவில் இயங்கி வந்தது

இந்திய சுதந்திரத்திற்காக தங்கள் உயிரையும் கொடுக்கத் தயாரான இளைஞர்கள் அந்த ஒற்றர் படையில் இருந்தனர்

அதில் ஒருவர் வைக்கம்  *அப்துல் காதர்*_

ஒற்றர் படையின் முதல்கட்ட நடவடிக்கையாக ஐந்து ஒற்றர் படை வீரர்கள் கேரளாவின் கோழிக்கோடு அருகிலுள்ள தண்ணூர் கடற்கரையில் 27-12-1942- இல் நீர் மூழ்கிக் கப்பல் மூலம் வந்திறங்கினர்


இதே நேரத்தில் பர்மாவில் இருந்து அரகடகன் வழியாக மற்றொரு குழு இந்தியாவிற்குள் நுழைந்தது




இவ்வீரர்கள் தங்களது பணிகளை ரகசியமாக மேற்கொண்டு வரும்போது சிலரால் காட்டிக் கொடுக்கப்பட்டு அனைவரும் கைதானர்கள்


இந்த ஒற்றர்படை வழக்கில் ஐந்தாண்டுகள் கடுஞ்சிறைத் தண்டனைப் பெற்ற 14 நபரில்  தமிழ்நாடு கீராம்பூரைச் சேர்ந்த *முஹம்மது கனி* யும் ஒருவர்_
சென்னை கோட்டையில் விசாரிக்கப்பட்டு அனைவரும் சென்னை சிறையில் அடைக்கப்பட்டனர்

விசாரணை நடத்திய நீதிபதி மாக், மரணதண்டனை வழங்கினார்

1943 - ஆம் ஆண்டு செப்படம்பர் 10-ஆம் தேதி அதிகாலைதூக்கு_
தூக்கிற்கு முந்திய நாள் இரவு  *அப்துல் காதர்* தேசத்து மக்களுக்கு எழுதிய மடல்


அமைதியையும் நிலையான மனதையும் அல்லாஹ் எனக்கு தந்துள்ளான்
நாட்டுக்காக நான் என் வாழ்வை இழக்கிறேன்
 
நீங்கள் உங்கள் மகனான என்னை இழக்கிறீர்கள்* *நாளை காலை இந்த உயிர் நின்றுவிடும்
 
இந்த கரங்கள் எழுதாது. இதயம் துடிக்காது நாட்டிற்காக உயிரை விட்ட முழு நிலவினைப் போன்றவர்கள் முன்பு நான் மிகச் சிறிய மெழுகுவர்த்தி
ரம்சான் 7- ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 5-மணிக்கும் 6-மணிக்கும் இடையே நான் மரணம் அடைவேன்

இதோ கடிகாரம் 12 அடிக்கிறது என் மரணத்தின் முதல் கட்டம் ஆரம்பித்து விட்டது.என்றேனும் ஒருநாள் உங்கள் மகன் இந்த தேசத்திற்காகத் தைரியத்துடன் மரணத்தைச் சந்தித்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள் !என்று எழுதிவைத்தார்


அப்துல் காதரிடம்*'உனது இறுதி விருப்பம் என்ன?' என்று கேட்கப்படுகிறது.
அதற்கு *அப்துல் காதர்*

இந்து மதத்தைச் சார்ந்த என் நண்பர் ஆனந்தனையும் என்னையும் ஒரே நேரத்தில் தூக்கிலிட வேண்டும்! என்று இந்து முஸ்லீம் ஒற்றுமைகாக சாகும் கடைசி தருவாயிலும் தேசநலனே முக்கியம் என்றார்.

மதங்கடந்த மனிதநேய உணர்வுடன் இம்மண்ணிற்காய்
இந்திய தேசத்திற்காக உயிரை விட்ட
*வைக்கம் அப்துல் காதர்*
பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்*


           🏻 *இஸ்லாமியர்களின் தியாகங்கள் தொடரும்​*


Tags: இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு

Give Us Your Feedback